ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதனை இளைஞன்
தெய்வத்தால் ஆகாது எனினும் மெய் வருத்தக்கூலி தரும். ஆம் கால்கள் இருந்தும் வெற்றியை வாழ்க்கையை கொண்டு செலுத்த முடியாத மக்கள் மத்தியில் சக்கர நாற்காலியில் இருந்தகொண்டே சாதனை செய்யத்துடிக்கிறான் அந்த இளைஞன்.
அவன்தான் நிமால்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவன் தனது ஆரம்ப கல்வியை வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் தொடர்ந்தான். கா.பொ.த சாதாரணதரம் சித்தியெய்தி கா.பொ.த உயர் தரத்தை யாழ் மத்தியகல்லரியில் கற்ரான்.
இந்தக் காலங்களில் தனது கேள்வி ஞானத்தின் மூலம் இசையில் ஒண்றிப்போன நிமாலின் பாடல்கள் இல்லாத பாடசாலை நினைவூகளே இல்லையென்னும் அளவிற்கு நிமாலின் பாடல்கள் மாணகர்வள் ஆசிரியர்கள் மத்தியில் சிறப்பிடம் பெற்றிருந்தன.
ஏன் ஏனைய கோயில் நிகள்வூகள் போன்ற பொது நிகழ்;வூகளிலும் அவன் குரல் ஒலிக்கத்தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் உயர்தரம் கற்றவூடன் வேலை தேடி வன்னிக்கு வரநேர்ந்தது.; வன்னி யூத்தத்தில் 2008 ஆகாஸ்ட் முதலாம் திகதி நடந்த எறிகணை வீச்சில் சிக்குண்டு தனது இரண்டு கால்களையூம் இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிமாலுக்கு ஏற்ப்பட்டது.
 ஒருமனித உயிர் எவ்வளவூ துன்பத்தை சந்திக்க முடியூமோ அவ்வளவூ துன்பத்தையூம் அனுபவித்தாலும் தன்னம்பிக்கையூடன் தனது இசைப் பயணத்தை தொடர முயற்சி செய்தான். இதற்காக கடுமையாக உழைத்து பல்வேறு நண்பர்களின் உதவியூடன் நத்தார் காணோலிப்பேழையினை வெளியிட்டான். அந்த பாடல் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற அதன்பின் வலியின்வரிகள் எனும் தனது துன்பம் சிலவற்றை தொகுத்து ஒரு காணோலிப்பேளையை பல சிரமங்கள் மத்தியில் இண்று வெளியிட்டுள்ளான்.
நத்தார் சீடி வெளியிட்டன். அந்த முயற்சி வெற்றியளித்தது. அது கடவூள் சம்பந்த பட்ட விடையம் பலர் அதை விரும்பவில்லை. எனக்கு நிறைய தன்னம்பின்கை இருக்கு. ஒரு முயற்சி செய்து பாப்பம் எண்டு சொல்லி வலியின் வரிகள் வேலையைத் தொடங்கினன் என்கிறாh; நிமால்.
ஒரு ஐஞ்சு பாட்டு செய்வம் எண்டு யோசிச்சன். ஓடியோ பாட்டு செய்தா அதன் உணர்வூகள் எந்த அளவூக்கு இருக்கும் எண்டு தெரியல. யார் செய்தது எண்டு தெரியாது. அதை வீடியோவா செய்தா; கஸ்டம்இ வலிஇ தன்னம்பிக்கை எல்லாம் முழுமையா சமூகத்திடம் போகும் என்று நிழனத்து வீடியோ பாடல்களாக தொகுத்தன். அந்த முயற்சி  வெற்றி அளிச்சிருக்கு. நிறையபேருக்கு விசயம் போய் சேந்திருக்கு சேந்து கொண்டும் இருக்கு.
என்னபோல இருக்கிற நிறைய ஆக்கள் முயற்ச்சிடே நம்பிக்கையோட இருக்கினம். எனக்கு நெருக்கமானவா;கள் இப்படி இரண்டு கால்களும் இழந்து கிட்டத்தட்ட ஆறு ஏழு நண்பா;கள் இருக்கிறாh;கள். இது மகிழ்ச்சியைத் தருகிறது. அதில ஒன்று இரண்டு போ;தான் முயற்ச்சி இல்லாமல் இருக்கினம். அவா;களையூம ஊக்குவிப்பது இத்திட்டத்தில் ஒரு எண்ணம்.
இரண்டு கால்களும் இழந்தவை ஒட்டோ ஒடுகினம். ஏனைய நண்பா;கள் கடல் தொழிலுக்கு போய்வருகினம். சில ஆட்கள் மனசுடைந்து போய்யிருக்கினம். ஒற்றக்கால் இல்லாத ஆட்கள் கூட மனசுயூடைந்து போய்யிருக்கினம். அவா;களுக்கு தன்னம்பிக்கை இல்லாதது தான் காரணம்.
அதை நினைத்து மற்றது ஒரு விசையம் நடந்ததை நினைத்து கொண்டிருந்தால் நாங்கள் பிணத்துக்கு சமனானவா;களாக இருப்பம் நடந்துமுடிஞ்ச விசையங்களை மறந்திடனும். விழுந்தம் எண்டு சொன்னால் அப்படியே விழுந்து இருக்கமாட்டம் திரும்பி எழும்புவம். எழும்பினாத்தான் நாங்கள் அடுத்த படிக்கு நகரலாம் அடுத்த கட்டத்துக்கு போகலாம். நினைச்சுக்கொண்டு யோசிச்சுக்கொண்டு துன்பப்பட்டுக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதில் அர்தமில்லை.
அந்த வரிகள் உண்மையில் எம்மனதில் வலியை ஏற்படுத்துகிண்றன. எம்கண்களில் கண்ணீரை வரவழைத்து அவன் சக்கர நாற்காலியில் புன்னகைத்துக்கொண்டிருக்கிறான்.
கண்ணிருந்தும் குருடாய் காதிருந்தும் செவிடாய் வாழும் மனிதர் மத்தியில் தன்னம்பிக்கையின் வடிவமாக நிற்கும் நிமால் தனது உள்ளக்கிடகிகையை வெளியிடும் போது தன்னைப் போண்று இருப்பவர்கள் அனைவரும் தன்னம்பிக்கை கொண்டு எழவேண்டும். தன்னால் கஸ்ரபடும் ஏனையவர்களுக்கும் உதவி புரிய வேண்டும் எண்று கூறினார். மேலும் நடந்ததை நினைத்துக்கொண்டிருந்தால் நாங்கள் பிணத்துக்கு சமன் என்றும் தான் மேலும் முன்னேற வேண்டும் எண்ற ஆவலையூம் வெளியிட்டார்.
இவரது ஆசைகள் நிறைவேற எம்மாலான உதவிகளை செய்வோம் அவன் இசை பயணம் தொடர எம்
வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக