திங்கள், 1 செப்டம்பர், 2014

வன்னி அடங்காப்பற்று
பூர்வீகக் குடிகளின் ஆட்சிக்காலத்தில் எவருக்கும் அடங்காத ஒரு 
நிலப்பரப்பாக விளங்கியதனால் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து வந்த வன்னியர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் யாழ்ப்பாண ஆட்சிக்கும் சிங்கள ஆட்சிக்கும் உட்படாமல் ஒருதனி நிலமாக திகழ்ந்ததினால் அடங்காப்பற்றாகவே இருந்தது.
1505ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் அன்னியர் மன்னார் செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களை ஆக்கிரமித்த பின்னர் அடங்காப்பற்றின் எஞ்சிய பிரிவை வன்னியர் ஆட்சி செய்ததால் அப்பிரதேசத்தை 'வன்னிஸ்' என்று அழைத்தனர்.
ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆகியவரும் அவ்வாறே அழைத்தனர்.
1811 இல் கடைசி வன்னியனான பண்டார வன்னியனின் மறைவு வரை 'வன்னிஸ்' என்றே இப்பிரதேசம் அழைக்கப்படலாயிற்று.
1796-1947 வரை இடம்பெற்ற ஆங்கிலேயர் ஆட்சியில் வடமாகாணத்தின் ஒரு பிரிவு வன்னி என்று குறிக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் வன்னி ஒரு தனி மாவட்டமாகவே ஆக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக